தக் லைஃப் தோல்வியால் நிலைகுலைந்த கமல்ஹாசன்? ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்…
Author: Prasad20 August 2025, 12:22 pm
படுதோல்வியடைந்த தக் லைஃப்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் ஒரு சுமாரான திரைப்படமாக அமைந்தது.
ரூ.300 கோடி பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் ரூ.97 கோடிகளையே வசூல் செய்தது. இதன் மூலம் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது “தக் லைஃப்” திரைப்படத்தின் தோல்வியால் தனது தந்தை கமல்ஹாசனின் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

துவண்டுப்போனாரா கமல்ஹாசன்?
“தக் லைஃப் தோல்வி அவரை சுத்தமாக பாதிக்கவில்லை. அவர் எப்போதும் எல்லா பணத்தையும் சினிமாவில் தான் திரும்ப போடுவார். பணத்தை கொண்டு மூன்றாவது கார், இரண்டாவது வீடு என அவர் வாங்க விரும்புவதில்லை. எல்லாமே சினிமாவிற்குத்தான் போகிறது. இந்த நம்பர் கேம் அவரை பாதிப்பதில்லை” என கூறியுள்ளார். “தக் லைஃப்” தோல்வியால் கமல்ஹாசன் துவண்டு போனார் என வதந்திகள் பரவி வந்த நிலையில் இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
