டெலிவரி பாய் என பொய் சொல்லி ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்த ரசிகர்? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?
Author: Prasad21 August 2025, 10:58 am
கிங் கான்
பாலிவுட்டில் “கிங் கான்” என புகழப்படுபவர்தான் ஷாருக்கான். உலகம் முழுவதுமே இவரது நடிப்புக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். இவரை நேரில் பார்ப்பதற்கு இவரது வீட்டின் முன் ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும். அந்த வகையில் சுபம் பிரஜாபத் என்ற சமுக வலைத்தள பிரபலம் ஒருவர் டெலிவரி பாய் வேடத்தில் ஷாருக்கானை பார்க்க முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டெலிவரி பாய் போல் வேஷம் போட்ட நபர்
சுபம் பிரஜாபத் என்ற இன்ஸ்டா பிரபலம், ஷாருக்கானின் வீட்டிற்குள் எப்படியாவது நுழைய வேண்டும் என ஒரு டெலிவரி பாய்யின் டெலிவரி பேக்கை வாங்கி ஷாருக்கான் வீட்டிற்கு வெளியே இருக்கும் காவலாளியிடம் “ஷாருக்கான் ஆர்டர் போட்ருக்கிறார்” என கூற, அதற்கு அந்த காவலாளி வீட்டிற்குள் செல்ல வேறு ஒரு வழியை காட்டுகிறார். அந்த வழியில் சென்ற சுபம் பிரஜாபத் இரண்டாவது காவலாளியிடம் “ஷாருக்கான் ஆர்டர் போட்ருக்கிறார்” என்று கூற, ஆனால் அங்கே அந்த பொய் எடுபடவில்லை. மிகவும் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்.
சுபம் பிரஜாபத், இதனை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
