கண்டிப்பா திருமணம் பண்ணிக்கனுமா? ஐஸ்வர்யா ராஜேஷின் கேட்ட கேள்வி! வேண்டாம் என்ற ரசிகர்கள்…
Author: Prasad21 August 2025, 1:10 pm
Dusky Queen
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் டஸ்கி குயின் என வர்ணிக்கப்படுபவர். தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், “நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்த அவர், தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து ஒரு விஷயத்தை அவரது ரசிகர்களின் மத்தியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருமணம் எப்போது?
சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், “முதலில் நீங்கள் சொல்லுங்கள், திருமணம் செய்துகொள்ளலாமா? வேண்டாமா?” என கேட்டார். அதற்கு பலரும் வேண்டாம் என கூறினார்கள்.
அதற்கு சிரித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன், நானே அதனை முதலில் அறிவிப்பேன்” என கூறினார். ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
