கழிப்பறை, தண்ணீர் வசதி எதுவும் இல்லை! அனிருத் இசை நிகழ்ச்சி தடை வழக்கில் நீதிபதி போட்ட உத்தரவு?
Author: Prasad23 August 2025, 10:37 am
ஹுக்கும்….
அனிருத்தின் ஹுக்கும் கான்செர்ட் இன்று சென்னை அருகே உள்ள கூவத்தூரில் நடைபெறவுள்ளது. இந்த கான்செர்ட்டில் கிட்டத்தட்ட 30,000 பார்வையாளர்களுக்கு மேல் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் இந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது எனவும் இந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடத்தில் கழிவறைகள், தண்ணீர் வசதி போன்ற எந்த வசதிகளும் செய்யப்படவில்லை எனவும் செய்யூர் தொகுதி எம் எல் ஏ பனையூர் பாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மேலும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடத்தில் குறுகலான சாலை இருப்பதால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பனையூர் பாபு அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி உத்தரவிட்டது என்ன?
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்பவரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல் துறை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் பனையூர் பாபுவின் வழக்கையும் நிலுவையில் வைத்தார். இதன் மூலம் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு எந்த வித தடையும் இல்லை என தெரிய வந்துள்ளது.
