எதிர்பாராததை எதிர்பாருங்கள்! பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் WWE புகழ் Undertaker?
Author: Prasad23 August 2025, 12:52 pm
தொடங்கப்போகும் புதிய சீசன்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசனில் உமைர், ஷாபனா, நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸ் 19 ஆவது சீசன் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்
அதாவது 90ஸ் கிட்களின் ஃபேவரைட் WWE வீரரான Undertaker ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. Wild Card Entry ஆக இவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப உள்ளார்களாம். இச்செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. Undertaker-க்கு 7 உயிர்கள் இருப்பதாக 90’ஸ் கிட்களின் மத்தியில் ஒரு பழங்கதை வலம் வருவது உண்டு.
Undertaker-வுடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
