துப்பாக்கி யார் கையில இருந்தாலும் வில்லன் நான்தான்-கவனத்தை பெற்ற மதராஸி வசனத்தின் பின்னணி?
Author: Prasad25 August 2025, 11:00 am
Action அதகளம்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முழுக்க முழுக்க அனல் பறக்கும் Action திரைப்படமாக உருவாகியுள்ளது “மதராஸி”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதில் வித்யுத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க அனல் பறக்கும் இரத்தம் தெறிக்கும் ஆக்சன் அதகளமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக டிரெயிலர் பார்க்கையில் தெரிய வருகிறது.

கவனத்தை பெற்ற வசனம்
இத்திரைப்படத்தின் டிரெயிலரில் வித்யுத் ஜம்வால் ஒரு வசனம் பேசுகிறார். “துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான்டா” என்று கூறுகிறார். “GOAT” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் “துப்பாக்கியை பிடிங்க சிவா” என்று கூறுவார்.
விஜய்யின் “துப்பாக்கி” திரைப்படத்தின் வில்லன் வித்யுத் ஜம்வால். அந்த வகையில்தான் இந்த வசனம் அமைந்துள்ளது என இணையத்தில் ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர். இந்த வசனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
