மச்சக்காரன்யா நீ? பிரபல நடிகையுடன் நெருக்கமாக நடனமாடிய கூமாப்பட்டி தங்கப்பாண்டி!

Author: Prasad
25 August 2025, 2:36 pm

ஏங்கககக……

கூமாப்பட்டி என்ற கிராமத்தை உலகளவில் பிரபலப்படுத்திய நபர்தான் தங்கப்பாண்டி. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சொந்த ஊரான கூமாப்பட்டியை குறித்து வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பின. தனது ஊர் ஒரு ஸ்விட்சர்லாந்து எனவும் தனது ஊரில் உள்ள தண்ணீர் சர்பத் போல் இனிக்கும் எனவும் அவர் கூறியது பலராலும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வீடியோவின் தொடக்கத்திலும் ஏங்ககககக…. என அவர் கூறுவது கவனத்தை குவித்தது. 

இவ்வாறு  கூமாப்பட்டியை உலகம் முழுவதும் பிரபலமாக்கியதன் மூலம் தானும் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஒரு பிரபல நகை கடை விளம்பரத்திலும் ஜவுளி கடை விளம்பரத்திலும் தங்கப்பாண்டி நடித்தார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்துதான் தற்போது மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் தங்கப்பாண்டி

Koomapatty thangapandi participating in zee tamil single pasanga

நடிகையுடன் நெருக்கமாக நடனமாடும் காட்சி?

அதாவது கூமாப்பட்டி தங்கப்பாண்டி தற்போது ஜீ தமிழின் “சிங்கிள் பசங்க” என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இதில் இந்த வாரம் ரீகிரியேஷன் சுற்று நடைபெற்றது. இதில் நடிகை சாந்தினி பிரகாஷும் தங்கப்பாண்டியும் ஜோடியாக “சலக்கு சலக்கு சரிகை சேலை” என்ற பாடலுக்கு நடனமாடினர். இருவரும் மிகவும் நெருக்கமாக நடனமாடிய காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குடா”  என தங்கப்பாண்டியை குறிப்பிட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!