கமல்ஹாசன் காதலித்த பெங்காலி நடிகை? சீக்ரெட்டை சுக்கு நூறாக உடைத்த ஸ்ருதிஹாசன்…
Author: Prasad26 August 2025, 11:06 am
கமல்ஹாசனின் காதல்கள்?
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் ஒரு காலகட்டத்தில் இளம் பெண்களை தனது வசீகரத்தால் கவர்ந்த புன்னகை மன்னனாக வலம் வந்தவர். அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. எனினும் அந்த காதல் கைக்கூடவில்லை.
அதனை தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளர் சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும். எனினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சரிகாவும் கமல்ஹாசனும் பிரிந்து வாழத்தொடங்கினார்கள். அதன் பிறகு நடிகை கௌதமிக்கும் கமல்ஹாசனுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. அந்த காதலும் ஒரு கட்டத்தில் பிரிவை சந்தித்தது. இவ்வாறு கமல்ஹாசனின் காதல் கதைகள் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானவை.

கமல்ஹாசனின் பெங்காலி காதலி…
இந்த நிலையில் கமல்ஹாசன் காதலித்த பெங்காலி நடிகை குறித்த ஒரு செய்தியை ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அப்பேட்டியில் சத்யராஜும் ஸ்ருதிஹாசனும் கமல்ஹாசனை குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சத்யராஜ், “உங்களது தந்தை (கமல்ஹாசன்) மொழிகளை கற்றுக்கொள்வதில் வல்லவர். ஒரு பெங்காலி படத்தில் அவரே பெங்காலி பேசி நடித்திருந்தார்” என கூற, அதற்கு ஸ்ருதிஹாசன்,
“அவர் ஏன் பெங்காலி கற்றுக்கொண்டார் தெரியுமா? அந்த சமயத்தில் அவருக்கு பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரை கவரவேண்டும் என்பதற்காகத்தான் எனது தந்தை பெங்காலி கற்றுக்கொண்டார். சினிமாவிற்காக எல்லாம் அவர் பெங்காலியை கற்றுக்கொள்ளவில்லை.

இதன் காரணமாகத்தான் ஹேராம் படத்தில் ஒரு பெங்காலி கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு அபர்ணா என்று பெயர் சூட்டினார்” என கூறினார். ஸ்ருதிஹாசன் இவ்வாறு தனது தந்தை ஒரு பெங்காலி நடிகையை காதலித்தது குறித்த தகவலை பகிர்ந்துகொண்டது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.
