அமைச்சர் ஐ பெரியசாமிக்கு என்னாச்சு.? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி : ஆதரவாளர்கள் ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2025, 1:47 pm
திண்டுக்கல்லில் உள்ள ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார் திமுக மூத்த தலைவரான ஐ.பெரியசாமி. திமுகவில் மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திண்டுக்கில் ,ருந்து மதுரைக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர், மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்,. அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் அமைச்சர் வீடு, அவருடைய மகன் மற்றும் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவதுகள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.
