கந்துவட்டிக்கு கடன்? தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சிக்கலில் விழுந்த ரவி மோகன்?
Author: Prasad26 August 2025, 5:56 pm
ரவி மோகன் ஸ்டூடியோஸ்
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் ரவி மோகனின் தோழியான கெனீஷாவும் கலந்துகொண்டார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக நடிகர் ரவி மோகன் தொடக்கத்திலேயே 10 திரைப்படங்களுக்கான பிராஜெக்ட்டை தயார் படுத்தி வருகிறார். மேலும் இதில் ரவி மோகன் யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, ரவி மோகன் குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.

கந்து வட்டிக்கு கடன்?
“பட தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்குவது என்பது புது விஷயம் அல்ல. ஆனால் கந்துவட்டி காரர்களிடம் எல்லாம் ரவி மோகன் சார்பாக கடன் கேட்கிறார்களாம். இந்த தகவலால் ரவி மோகனின் குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறார்களாம். இப்படி அதிகளவு கடன் வாங்குகிறாரே என அவரது குடும்பமே கவலையில் இருக்கிறார்களாம்” என தனது வீடியோவில் பிஸ்மி ரவி மோகன் குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
