மதுரையில் அந்த அமைச்சர் இருக்காரா? அரசியல் வாழ்க்கையே முடிஞ்சுடுச்சு.. இனி சூரியனுக்கு வேலையில்லை!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 12:55 pm
நூறு வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் வரியைப்பு விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து மண்டல உறுப்பினர்கள் ராஜினாமா கைது என சுமார் 17 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நாளை மதுரை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று அதிமுகவின் மாமன்ற உறுப்பினர்களோடு இணைந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது மதுரைமாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் அதன் அடிப்படையில் தற்போது 100 வார்டுகளிலும் கள ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
நீதியரசர்கள் சரியான ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை கூறியிருக்கிறார்கள். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாமன்ற உறுப்பினர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்.
அதன் எதிரொலியாகவே தற்போது கைது மற்றும் ராஜினாமா உள்ளிட்டவைகள் நடைபெற்றிருக்கிறது.மதுரை மாநகராட்சியின் நடைபெற்று இருக்கக்கூடிய முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த ஒரு இயக்கம் தான் அதிமுக.
வடிவேலு படப் பாணியில் நாங்களும் முறையிட்டோம் என்று ஆளே இல்லாத மைதானத்தில் வெறும் கம்பை சுழற்றுவது போல கம்யூனிஸ்ட் கட்சியினரின் செயல்பாடுகள் இருக்கிறது.

நீதி அரசர்களின் இந்த தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி ஈபிஎஸ் மதுரைக்கு வருவதற்கு முன்னரே நல்லதொரு அறிவிப்பு மதுரை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த வரி ஏய்ப்பு முறைகேடு காரணமாக மக்கள் மத்தியில் திமுக அரசின் மீது மிகப்பெரிய எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
மதுரை மேயரின் கணவர் உட்பட 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற மண்டல தலைவர்களை ராஜினாமா செய்யச் சொன்ன தமிழக அரசு மேயர் விஷயத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன்?
மேயரின் தலைமையில் நாளை மாமன்ற கூட்டம் நடைபெறுவது சாத்தியக்கூறு அல்ல. மேயர் இந்திராணி இருக்கும் வரை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது சரியானதாக இருக்காது.
நாளை நடைபெறக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எங்களது அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
மதுரை மேயர் பதவி விலகும் வரை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் நீதி வழுவாமல் ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்த மதுரை மண்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கள ஆய்வில் ரூபாய் 30 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முறைகேடாக ஈடுபட்ட மேயிரின் கணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் அதற்கு காரணம் மேயர் தானே.
மேயரின் நிழலாகத்தான் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக ஈடுபட்டவர்கள் ராஜினாமா செய்திருக்கக்கூடிய நிலையில் இது ஒன்றும் புதிது அல்ல.
அரசியல் கருத்துக்கு தற்போது நான் பதில் சொல்ல முடியாது ஏனென்றால் நீங்கள் அதை மட்டும் தான் செய்தியாக பதிவு செய்வீர்கள் அதைப்பற்றி நாளைய தினம் பேசுகிறேன்
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா கணவர் தவறு செய்யும் பட்சத்தில் நிழல் நேராக இருந்து செயல்பட்ட வரை கைது செய்த நிலையில் மாநகராட்சி மேயரை நீக்கம் செய்யாதது ஏன்?
மதுரையில் இருக்கக்கூடிய இந்த இரண்டு அமைச்சர்களுடைய செயல்பாடுகள் தான் என்ன? மேற்குத் தொகுதியில் தற்போது அமைச்சர மூர்த்தி புதிதாக டிபன் பாக்ஸை கொடுத்து வருகிறார்

பதவியிறக்கம் செய்யப்பட்ட உடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சைலன்ட் மோடுக்கு சென்று விட்டார். வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா இல்லையா என்று தெரியவில்லை.
உங்க பொங்க சோறும் வேண்டாம் இந்த பூசாரித்தனமும் வேண்டாம் என்பது போல அமைச்சர் பி டி ஆர் இருக்கிறார். ஜெயலலிதா இபிஎஸ் காலகட்டத்தில் மதுரைக்கு எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான்.
தற்போது நான் ஏதாவது தெரிவித்துவிட்டால் அதை தலைப்புச் செய்தியாக வைப்பீர்கள் அதனால் தான் நான் அரசியல் கருத்துக்களை பேசுவதற்கு தயாராக இல்லை.
இருந்தாலும் சொல்கிறேன் இந்த திமுக அமைச்சர்கள் மதுரைக்கு என்ன கொண்டு வந்தார்கள்? சகோதரர் திருமாவளவன் திசை மாறி எங்கோ சென்று விட்டார் அவர் கருத்துக்கெல்லாம் பதில் கூறுவது சரியாக இருக்காது.
அதிமுக என்றும் தங்களது கொள்கையிலிருந்து மாறாது. எங்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது அதன் அடிப்படையில் தான் ஜெயலலிதா இபிஎஸ் ஆகியோர் வழியில் நாங்களும் இருக்கிறோம்

மேற்கு தொகுதியில் நிச்சயம் மேற்கு பகுதியில் சூரியன் உதிக்கும் என்று அமைச்சர் மூர்த்தியின் பேச்சுக்கு பதில் அளிக்கையில் இந்த தேர்தல் முடிந்த பிறகு அமைச்சர் மூர்த்தி எங்கே இருக்க போகிறார் என்று பார்ப்போம். அவர் ஸ்வீடன் போன்ற மேலை நாடுகளுக்கு சென்றது போல பேசுகிறார் மேற்கில் நிச்சயம் சூரியன் உதிக்காது

இறுதியாக செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் கேமராவை பார்த்து தலைவர்களே மாநகராட்சி உடைய எங்களுடைய இந்த குறையை மட்டும் போடுங்கள் என்று தனக்கே உரிய பாணியில் இருகரம் கூப்பி கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்.
