விஜயகாந்த்தை போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் : டிடிவி கணிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 1:40 pm
தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணத்தில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தம்பதிகளை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார்
பின்பு செய்தியாளர்களை சந்திந்த அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 75ஆண்டு கட்சிக்கும், 50 ஆண்டுகால கட்சிக்கும் இணையாக இருக்கிறது. எனவே நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுக்கு இல்லை. எங்களது இயக்கத்தை பலப்படுத்த தான் கவனம் செலுத்துகிறோம்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெறுவோம் என்பதை தான் தொடர்ந்து கூறி வருகிறேன். வருகிற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும் என தெரிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் தேர்தலின் போது விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதுபோல வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் தவெக பாதிப்பை ஏற்படுத்தும் அதுதான் எதார்த்தமான உண்மை எனவும் அதற்காக நான் அந்த கூட்டணிக்கு செல்வதாக அர்த்தம் இல்லை.
ஓபிஎஸ் சமாதானப்படுத்துவதற்கு டெல்லியில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தி கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
