கணவரை பிரிந்து வந்த பெண்ணுடன் இளைஞர் நெருக்கம்.. உறவை பெண் துண்டித்ததால் விபரீதம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2025, 10:58 am
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் வயது 29. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார் எந்த நிலையில் கணவரை பிரிந்து வாழும் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணுடன் ஜெயபிரகாசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர் இந்த நிலையில் ஜெயபிரகாஷ் உடன் பழகுவதை அந்த பெண் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரகாஷ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏன் என்னுடன் பழக மறுக்கிறாய் என எனக் கேட்டுள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சராசரியாக தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்

ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்ணை உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து விருகம்பட்டு காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயப்பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
