இனிமே அந்த மாதிரி காட்சில நடிக்க மாட்டேன்-நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு விஷால் எடுத்த முக்கிய முடிவு?
Author: Prasad30 August 2025, 11:10 am
சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம்
சில மாதங்களுக்கு முன்பு விஷாலும் சாய் தன்ஷிகாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா நடைபெறும் எனவும் அப்போது தங்களது திருமணமும் நடைபெறும் எனவும் அறிவித்தனர்.

ஆனால் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா தள்ளிப்போனது. இந்த நிலையில்தான் நேற்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இரு வீட்டாரும் கலந்துகொண்ட இவ்விழாவில் விஷால்-சாய் தன்ஷிகா ஜோடியின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிய வருகிறது.
இனி முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன்
நிச்சயதார்த்தம் முடிவடைந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால், “இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. அதன் பின் எங்களின் திருமணம் நடைபெறும். பேச்சுலர் வாழ்க்கை நிறைவடைந்ததை தொடர்ந்து என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வர உள்ளது. இனி சினிமாவில் காதல் படங்களில் நடிப்பேன், ஆனால் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.
