2026 முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப்போவது உறுதி : அண்ணாமலை உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2025, 2:25 pm

தமாகா தலைவர் மூப்பனாரின் நினைவு தினம் இன்று சென்னையில் அனுசரிக்கப்பட்டது. மூப்பனாரின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, தமிழக மண்ணில் நேர்மையான, மக்கள் நலன் காக்கும் அரசியலை உருவாக்கிட, மூப்பனார் அவர்களின் வழியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், மாற்றத்தின் முதல் படியாக அமைய வேண்டும் என்பதே மக்களின் ஆவல். டீக்கடைகள் முதல் தெருக்கள் வரை, சாமானிய மக்கள் மாற்றத்தைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டனர்.

அவர்களின் குரல் வலிமையடைகிறது. இந்த மாற்றத்திற்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் திரு. இபிஎஸ் அவர்கள் தலைமையில் பயணிக்கிறோம்.

இன்று இந்த மேடையில் அவர்கள் உரையாற்றி, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளார்கள்.2026இல், தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அவர்கள் அமர்ந்து, ஒரு புதிய புரட்சியைத் தொடங்குவார். இந்த மாற்றம் ஏழை மக்களுக்கு விடிவெள்ளியாக அமைய வேண்டும்.

மக்கள் நலனுக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் இந்த அரசு செயல்பட வேண்டும்.மேலிருந்து நம்மைப் பார்த்து ஆசி கூறும் மாண்புமிகு ஜி.கே.மூப்பனார் அவர்களின் கனவு, 2026 தேர்தலில் நனவாகும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.வாருங்கள், 2026இல் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியல் கொண்டு வருவோம்!

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!