விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு… தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2025, 5:00 pm
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, மிகவும் பரபரப்பாக இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்கும் பயணிக்கின்றன.
இந்நிலையில், வரும் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
புதிய கட்டண விவரங்கள் (பழைய கட்டணத்துடன் ஒப்பீடு):
கார்/பயணிகள் வேன் ஒரு முறை பயணம்: ₹105 (மாற்றமில்லை)
இரு வழி பயணம்: ₹160 (பழைய கட்டணம்: ₹155)
மாதாந்திர பாஸ்: ₹3,170 (பழைய கட்டணம்: ₹3,100)
லைட் கமர்சியல் வாகனங்கள்
ஒரு முறை பயணம்: ₹185 (மாற்றமில்லை)
இரு வழி பயணம்: ₹275 (பழைய கட்டணம்: ₹270)
மாதாந்திர பாஸ்: ₹5,545 (பழைய கட்டணம்: ₹5,420)
டிரக்/பஸ்
ஒரு முறை பயணம்: ₹370 (பழைய கட்டணம்: ₹360)
இரு வழி பயணம்: ₹555 (பழைய கட்டணம்: ₹540)
மாதாந்திர பாஸ்: ₹11,085 (பழைய கட்டணம்: ₹10,845)
மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் (2 ஆக்சிலுக்கு மேல்)
ஒரு முறை பயணம்: ₹595 (பழைய கட்டணம்: ₹580)
இரு வழி பயணம்: ₹890 (பழைய கட்டணம்: ₹870)
மாதாந்திர பாஸ்: ₹17,820 (பழைய கட்டணம்: ₹17,425)
பள்ளி பேருந்துகள் மாதாந்திர பாஸ்: ₹1,000 (பழைய கட்டணம்: ₹100)
கட்டண உயர்வு விவரம் : ஒரு நாள் கட்டண உயர்வு: ₹5 முதல் ₹20 வரை
மாதாந்திர கட்டண உயர்வு: ₹70 முதல் ₹395 வரை
இந்த கட்டண உயர்வு பயணிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமையலாம்.
