பொது மேடையில் நடிகை அஞ்சலியின் இடுப்பை கிள்ளிய பிரபல நடிகர்? வைரல் வீடியோவால் பரபரப்பு…
Author: Prasad1 September 2025, 12:49 pm
பிரபல போஜ்புரி நடிகரின் செயல்…
பிகாரை சேர்ந்த பிரபல போஜ்புரி நடிகர்தான் பவன் சிங். இவர் ஒரு பிரபல பாடகரும் கூட. இவர் சமீபத்தில் நடைபெற்ற “சாயா சேவா கரே” என்ற பாடலுக்கான புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது பவன் சிங் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக நடிகையான அஞ்சலி ராகவின் இடுப்பை கிள்ளினார். அவர் இடுப்பை பிடித்து கிள்ளியபோது உள்ளுக்குள்ளே சங்கடமாக உணர்ந்தாலும் அதனை அவர் வெளிப்படுத்திக்கொள்ளாமல் சிரித்தப்படி காணப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலருக்கும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பவன் சிங்கின் செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட பவன் சிங்
இந்த நிலையில் நடிகை அஞ்சலி ராகவ் தான் போஜ்புரி சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவ்விவகாரம் பூதாகரமான வெடித்த நிலையில் நடிகர் பவன் சிங், “எனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்” என தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இச்சம்பவம் போஜ்புரி திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
