இளம் இயக்குனர்கள் பண்றது முட்டாள்தனம்- திடீரென கொந்தளித்த மிஷ்கின்! யாரை சொல்றார்?
Author: Prasad2 September 2025, 10:37 am
இயக்குனர் டூ நடிகர்
தமிழ் சினிமாவின் வித்தியாசமான படைப்புகளை கொடுத்த இயக்குனர் மிஷ்கின் தற்போது “பிசாசு 2”, “டிரெயின்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். எனினும் சமீப காலமாக அவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் இயக்கிய திரைப்படங்களை விட இவரது நடிப்பு பலராலும் ரசிக்கப்படுகிறது என்றே பரவலாக பேசப்படுகிறது. சமீபத்தில் “டிராகன்” திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. இவ்வாறு பல இளம் இயக்குனர்களின் திரைப்படங்களில் மிஷ்கின் சிறப்பாக நடித்து வருகிறார்.

இளம் இயக்குனர்களின் முட்டாள்தனம்?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மிஷ்கின், இளம் இயக்குனர்கள் குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “விஜய் சேதுபதி போன்ற 50 திரைப்படங்கள் நடித்த ஒரு நடிகர் ஒரு காட்சியில் எமோஷனலாக நடிக்கும்போது இன்னும் கொஞ்சம் எமோஷனலாக பண்ணுங்க என ஒன்ஸ் மோர் கேட்பது முட்டாள்தனம். இளம் இயக்குனர்கள் படமாக்கும்போது, ‘நீங்கள் நடிப்பது நான் நினைத்தது போல் இல்லை’ என்கிறார்கள். ஒருவர் நினைத்தது போல் மற்றவர் எப்படி நடிக்க முடியும்.
ஒரு காட்சியில் ‘உனக்கு அறிவு இருக்காயா?’ என்று எமோஷனலாக கேட்டால் அது அங்கே பார்வையாளர்களுக்கு கம்யூனிகேட் ஆகிவிடுகிறது. இதுவே போதுமானது. அதற்கு மேல் எமோஷன் தேவையில்லை. எமோஷன் என்பது பார்வையாளர்களின் மனதில் ஏற்படுவதே ஒழிய நடிகர்களுக்குள் நடக்கும் விஷயம் அல்ல” என மிஷ்கின் அப்பேட்டியில் கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
