விஜய் இல்லாமல் நடந்த எஸ்ஏசி வீட்டின் கிரஹப்பிரவேசம்? என்னதான் சண்ட இருந்தாலும் இப்படியா?

Author: Prasad
2 September 2025, 11:47 am

விஜய்யை ஹீரோவாக்கிய எஸ்ஏசி…

தனது மகன் விஜய்யை எப்படியாவது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஆக்கிவிட வேண்டும் என்ற லட்சியத்தில் விடாபிடியாக இருந்தவர்தான் எஸ் ஏ சந்திரசேகர். தொடக்கத்தில் விஜய்யை வைத்து பல திரைப்படங்களை அவர் இயக்கினார். அதன் பின் விஜய் வெவ்வேறு இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும் அவரது தந்தையே அவருக்கு பக்க பலமாக இருந்தார். விஜய் எப்படிப்பட்ட படங்கள் நடிக்க வேண்டும், எப்படிப்பட்ட படங்கள் நடிக்க கூடாது என்பதை முடிவெடுக்கும் இடத்தில் எஸ்ஏசி இருந்ததாக கூறப்படுகிறது.  

Vijay not attending sa chandrasekhar house warming ceremony

இவ்வாறு தனது மகன் விஜய், தமிழ் சினிமாவின் டாப் நடிகராக உயர்வதற்கு பக்க துணையாக இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் விஜய் தனது தந்தையிடம் அவ்வளவாக பேசிக்கொள்வது இல்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து எஸ்ஏசியே ஒரு விழாவில் பேசியபோது, “ஒரு வீட்டில் அப்பாவுக்கும் மகனுக்கு இடையே வழக்கமாக எப்படிப்பட்ட பிரச்சனை வருமோ அதேதான் எனக்கும் விஜய்க்குமான பிரச்சனை. அவ்வளவுதான்” என கூறியிருந்தார். 

விஜய் இல்லாமல் நடந்த கிரஹப்பிரவேசம்

இந்த நிலையில் எஸ்ஏசி-ஷோபா ஆகியோர் புது வீடு ஒன்றை  கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் நடிகர் விஜய், அவரது மனைவி, மகன் என எவரும் கலந்துகொள்ளவில்லை.

Vijay not attending sa chandrasekhar house warming ceremony
Vijay not attending sa chandrasekhar house warming ceremony
Vijay not attending sa chandrasekhar house warming ceremony

இது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. “என்னதான் சண்டை இருந்தாலும் கிரஹப்பிரவேசத்திற்கு கூடவா வராமல் இருப்பது” என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!