மசாஜ் என்ற பெயரில் சிறுமியை சீரழித்த இளைஞர்… 3 வருடமாக நடந்த கொடூரம் : புகாரளித்தும் ஆக்ஷன் எடுக்காத காவல்துறை!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2025, 1:42 pm
கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி தற்பொழுது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது தாயை இழந்த நிலையில் தந்தை மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய அத்தை வீட்டில் பிசியோதெரபி செய்ய வந்ததாக கூறப்பட்ட சாகின் என்ற இளைஞர், அந்த மாணவியை கடந்த 2022 ம் ஆண்டு 15 வயது இருக்கும் போது இருந்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் படி கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பள்ளியில் படிக்கும் போது, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது அக்கா, அத்தை வீட்டிற்கு சென்று உள்ளனர்.
அப்போது அங்கே இருந்த சாகின், மசாஜ் செய்வதாக கூறி முதலில் சிறுமியின் அக்காவை அறைக்குள் அழைத்துச் சென்று உள்ளார். அங்கு இருந்து உடனடியாக வெளியே வந்த அந்த பெண்ணின் அக்கா கடைக்கு போவதாக கூறி சென்று விட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதாக கூறி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பின்னரும் இதேபோன்று அவர் பலமுறை மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் தற்பொழுதும் சாலையில் எங்கு ? நடந்து செல்லும் போது ஷாகின் இவரை பார்த்தால் வா என்று கூப்பிட்டு பாலியல் தொந்தரவு செய்வதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

நாளுக்கு நாள் அவரது பாலியல் தொல்லை அதிகரிக்கவே பாதிக்கப்பட்ட தற்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டு உள்ள அந்த மாணவி இதுகுறித்து அவரது தந்தை மற்றும் சகோதரிகளிடம் அவருக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதை அடுத்து காவல் துறையினர் சாகின் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் அத்தை மீது POCSO சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் புகார் அளித்து ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது வரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
