ஓவரா வேலை பார்த்து லைஃப் காலி- ஏ ஆர் ரஹ்மான் மனசுல இப்படி ஒரு சோக அலையா?
Author: Prasad3 September 2025, 1:48 pm
ஓய்வில்லாமல் அடிக்கும் இசைப்புயல்
இசைப்புயல் என்று போற்றப்படும் ஏ ஆர் ரஹ்மான் 33 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். காலத்திற்கு ஏற்றார் போல் தனது இசையை அப்டேட் செய்துகொள்ளும் ரஹ்மான் தற்போது 2K கிட்ஸ் ரசிக்கும்படியும் இசையமத்து வருகிறார்.
ஏ ஆர் ரஹ்மானின் மனைவியான சைரா பானு கடந்த ஆண்டு ரஹ்மானுடனான தனது விவாகரத்தை அறிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இத்தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ ஆர் ரஹ்மான் மனம் நொந்தபடி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஓவரா வேலை பார்த்து லைஃப் காலி?
“முன்பு நான் வெறி பிடித்தவன் போல் இரவும் பகலும் வேலை செய்வேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போதெல்லாம் நான் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வேலைப்பளுவை குறைத்துக்கொண்டேன்” என அப்பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
