பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர்? வெளியான வீடியோவால் பாலியல் சீண்டல் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2025, 1:48 pm

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு தெருவிளக்கு பணி செய்ததிற்கு நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார்.

அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டியா என முனியப்பனை திட்டியுள்ளார்.

இதனையடுத்து முனியப்பன் அந்த பணியை செய்யாமல் தட்டிகழித்து ஒருமையில் பேசியதாக கூறபடுகிறது. இதனால் பாதிப்படைந்த நகரமன்ற உறுப்பினர் ரம்யா
பொறுப்பு ஆணையர் சரவணனிடம் புகார் அளிக்க சென்றபோது புகாரை எழுத்து வடிவமாக அளிக்க ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் எழுத்து வடிவமாக புகாரளிக்க ரம்யா சென்றபோது ஆணையர் இல்லாததால் மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி ,சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை ரம்யா புகாரளித்துள்ளார்.

அப்போது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு முனியப்பனை அழைத்து விசாரித்துள்ளனர். பெண் கவுன்சிலரிடம் ஒருமையில் பேசிய புகாரால் உனது பதவி உயர்வு தடைபடும் என்று அறிவுறுத்திய போது நகரமன்ற தலைவி கணவர் ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டு விட்டு போ பா என முனியப்பனிடம் தெரிவித்தபோது திடீரென நகரமன்ற உறுப்பினர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என அழுது முனியப்பன் தெரிவித்தவுடன் உடனடியாக முனியப்பனை அழைத்து செல்லுங்கள் என கூறி அலுவலக அறையிலிருந்து வெளியே அனுப்பினர்.

இச்சம்பவத்தில் அரசு ஊழியரை மன்னிப்பு கேட்க சொல்லியதோடு காலில் விழ வைத்ததாக திமுக அதிமுக விசிக நகர உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி விசாரனை செய்ய வேண்டுமென நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் அரசு ஊழியர் தானாகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் மன்னிப்பு கேட்கும் போது ரம்யாவின் காலில் விழுந்த முனியப்பன் தனது கையை ரம்யாவின் இடுப்பில் வைத்து மன்னிப்பு கேட்டதால் பெண் கவுன்சிலரிடம் தவறான சீண்டலில் ஈடுபட்டதாக திண்டிவ்னம் டி.எஸ்.பி பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!