நள்ளிரவில் நடுக்காட்டில் ஓரினச்சேர்க்கை.. நம்பி போன பயிற்சி மருத்துவருக்கு காத்திருந்த டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2025, 2:19 pm
ஆபாச செயலியை நம்பி பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
சென்னையில் 24 வயது பயிற்சி டாக்டர் ஒருவர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக உள்ளார்.
இவர் சமீபத்தில தனது மொபைலில் உள்ள ஆபாச செயலியை பயன்படுத்திய போது, ஓரினச்சேர்க்கை தொடர்பாக ஒருவர் அழைப்பு கொடுத்துள்ளார்.
இதை நம்பிய அவர், கடந்த ஆக்ஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவில் தனது பைக்கில், நெல்லை – தூத்துக்குடி சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அங்கு வந்த ஒருவர், பயிற்சி டாக்டருடன் உரையாடி காட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட சிறுவர்கள், பயிற்சி டாக்டரை தாக்கி, கட்டையால் அடித்து செல்போனை பறித்துள்ளனர். மேலும் ஜிபே மூலமாக 21 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.
இதில் காயமடைந்த அவர், தனியாக சிகிச்சை எடுத்து கொண்டு, பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடூத்து போலீசார் நடத்திய விசாரணையில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்.
ஆபாச செயலியை நம்பி நடுக்காட்டுக்குள் போன பயிற்சி டாக்டருக்கு ஏற்பட்ட சம்பவம் இது போன்ற செயலிகளை நம்புபவர்களுக் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது.
