தோல்விமாறனாக ஆன வெற்றிமாறன்? தயாரிப்பாளர்னா என்ன சும்மாவா?- கொதித்தெழுந்த பிரபலம்…

Author: Prasad
3 September 2025, 3:52 pm

கடையை மூடிய வெற்றிமாறன்

வெற்றிமாறன் “கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி” என்ற பெயரில் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் தயாரித்த “மனுஷி”, “பேட் கேர்ள்” போன்ற திரைப்படங்கள் அவரை பந்தாடியது என்றுதான் சொல்ல வேண்டும். “மனுஷி” படத்தில் ஆட்சேபகரமான பல வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது என கூறி இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் நீதிமன்ற படிகளை ஏறினார். “மனுஷி” திரைப்படத்தின் சில காட்சிகளையும் வசனங்களையும் மாற்றியமைத்து சென்சார் போர்டுக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியது.

“பேட்  கேர்ள்” திரைப்படத்தில் சிறுவர்களை ஆபாசமாக காட்சிப்படுத்தியுள்ளதாக புகார் கிளம்ப இத்திரைப்படத்தின் டீசர் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. எனினும் “பேட் கேர்ள்” திரைப்படம் பல எதிர்ப்புகளை தாண்டி வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் “பேட் கேர்ள்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன்,  “பேட் கேர்ள் திரைப்படம்தான் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படம். நான் எனது கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியை மூடுகிறேன். இனி எந்த படத்தையும் நான் தயாரிக்கப்போவதில்லை” என கூறினார்.  

Vetrimaaran has huge amount of debt said by producer

தயாரிப்பாளர்னா சும்மாவா?

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, “காக்கா முட்டை திரைப்படம்தான் வெற்றிமாறன் தயாரித்த திரைப்படங்களில் அனைவருக்கும் தெரிந்த படம். அதன் பின்பு அவர் தயாரித்த படங்கள் பெயர் தெரியாத படங்களாகத்தான் இருக்கிறது. இப்படி தொடர்ந்து வெற்றிமாறன் தோல்வி படங்களை கொடுத்த நிலையில் அவர் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளார். 

Vetrimaaran has huge amount of debt said by producer

வெற்றிமாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தின் கதையே சர்ச்சைக்குரிய கதைதான். இந்த படத்திற்கு சென்சார் போர்டு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதே போல் மனுஷி படத்திலும் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றம் சென்றார். இயக்குனராக நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்த வெற்றிமாறன், தயாரிப்பாளராக மாறும்போது அதனால் ஏற்பட்ட அழுத்தத்தை அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை” என பேசியிருந்தார். இவர் வெற்றிமாறன் குறித்த பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!