சர்ச்சை வசனத்திற்கு சுமூகமான முடிவெடுத்த லோகா படக்குழு? இவ்வளவு ஸ்பீட்-ஆ இருக்காங்களே?
Author: Prasad3 September 2025, 4:59 pm
புதுமையான சூப்பர் ஹீரோ படம்
துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் “லோகா சேப்டர் 1; சந்திரா”. இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சர்ச்சைக்குள்ளான வசனம்
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் சாண்டியின் கதாபாத்திரம் பெங்களூர் பெண்கள் குறித்து பேசும் ஒரு வசனம் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் “லோகா சேப்டர் 1” படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பேசிய வசனம் கர்நாடக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அறிகிறோம். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வசனம் விரைவில் நீக்கப்படும். தங்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது.
#Lokah pic.twitter.com/q18SX8dh7G
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 2, 2025
