விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மர்ம மரணம்? சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2025, 4:23 pm
விஜய் மாநாட்டு சென்று இறந்தவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இருபதாம் தேதி சென்ற நிலையில்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே 27-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் இவரை மாநாட்டிற்கு முத்தியார் என்பவர் அழைத்ததின் பேரில் ஷபீர் என்கிற போலு என்பவர் அழைத்து சென்றதாகவும் இதுவரை தனது தம்பியின் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவல்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த மதனின் சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
