60 கோடி அபேஸ்? நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ் விட்ட போலீஸார்! அதிர்ச்சியில் பாலிவுட்
Author: Prasad5 September 2025, 6:44 pm
மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான தீபக் கோத்தாரி என்பவர், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தன்னிடம் ரூ.60 கோடி மோசடி செய்துள்ளதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி Best Deal Tv பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி பணத்தை பெற்று தனது தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக தீபக் கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

2015 முதல் 2023 வரை தனது நிறுவனத்தை விரிவாக்குவதாக கூறி இந்த பணத்தை தன்னிடம் இருந்து பெற்றதாகவும் முதலீடு செய்யும் பணத்தை 12% வட்டியுடன் திரும்ப தருவதாக உத்தரவாதம் அளித்ததாகவும் தீபக் கோத்தாரி கூறியுள்ளார்.
எனினும் அந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியை ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்ததாகவும் பின்னர் அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 திவால் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்ததாகவும் அப்புகார் தீபக் கோத்தாரி குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
