கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்பு.. வாடகை வீட்டில் நடந்தது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan6 September 2025, 11:45 am
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னியம்மன் கார்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தேவி (வயது36) என்பவர் வாடகை எடுத்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கும் இவரது கணவர் தண்டபாணிக்கு குடும்ப பிரச்சினையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது
இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் அந்த ஆண் பிள்ளைகள் தேவியின் தாய் வீட்டில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவரது தாய் மற்றும் மகன்கள் இவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆஃப் ஆகி உள்ள நிலையில் இன்று இவரது வீட்டிற்கு இவர் தாய் வந்து பார்த்தபோது மகள் சடலமாக தூக்கில் தூங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து
உள்ளனர்.

சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனை பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
