நண்பர் இபிஎஸ் ரெம்பவே விவரமானவர்.. செங்கோட்டையன் பதவியை பறித்தது குறித்து அமைச்சர் கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2025, 4:40 pm
மதுரையில் கோரிப்பாளையம், அப்போலோ மருத்துவமனை சந்திப்பு, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து பதில் அளித்த அமைச்சர் எ.வ வேலு,

அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றும் இல்லை இது அவர்கள் கட்சிப் பிரச்சனை நாங்கள் கருத்து கூறுவது என்பது சரியாக இருக்காது. ஆனாலும் கூட கட்சியினுடைய இன்றைய தலைவர் நண்பர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் சிந்தித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

என்னுடைய அனுபவத்தில் எந்த தலைமையாக இருந்தாலும் சரி ஒரு தீர்க்க தரிசனமான முடிவை பொதுக்குழு செயற்குழுவை கூட்டி முடிவெடுப்பார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி விவரமானவர் இந்நேரம் முடிவு எடுத்திருப்பார். என்று பேசினார்.
