ராஜமௌலியிடம் ஸ்ரீதேவியை கண்டபடி கோல் மூட்டிய தயாரிப்பாளர்? கொதித்தெழுந்த போனி கபூர்…

Author: Prasad
8 September 2025, 12:07 pm

இந்தியாவின் டாப் நடிகை

1980களில் நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர். அதனை தொடர்ந்து பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் தனது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். இவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என ரிப்போர்ட் வெளிவந்தது. இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய சினிமா ரசிகர்களின் நினைவாக மாறிப்போனார் ஸ்ரீதேவி. 

Boney kapoor denied talks of rajamouli about sridevi

ஸ்ரீதேவி குறித்து ராஜமௌலி

“பாகுபலி”, “RRR” போன்ற பிரம்மாண்ட  படைப்புகளை கொடுத்த ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ராஜமௌலி ஒரு பேட்டியில் “பாகுபலி” திரைப்படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ரீதேவிதான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அவர் ரூ.10 கோடி சம்பளம் கேட்டார், தனது குழந்தைகளுக்கும் சேர்த்து விமானத்தில் டிக்கெட் போட்டுக்கொடுக்கும்படியும் கேட்டார், மேலும் ஹோட்டலில் கூடுதலாக அறைகள் கேட்டார், இதன் காரணமாகத்தான் அவரை புக் செய்யவில்லை என கூறியிருந்தார். 

Boney kapoor denied talks of rajamouli about sridevi

ஸ்ரீதேவியை பற்றி கண்டபடி சொல்லிருக்காங்க…

இந்த நிலையில் ராஜமௌலி ஸ்ரீதேவி குறித்து கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர். “பாகுபலியில் சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்காக ராஜமௌலி ஸ்ரீதேவியை அணுகியது உண்மைதான். ராஜமௌலி எங்கள் வீட்டிற்கு வந்து கதை கூறினார். அந்த கதாபாத்திரம் ஸ்ரீதேவிக்கும் பிடித்திருந்தது. 

ஆனால் ராஜமௌலி கதை கூறிவிட்டு சென்ற பிறகு, பாகுபலியின் தயாரிப்பாளர்கள் வந்தார்கள். வழக்கமான சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே அவர்கள் வழங்க முன் வந்தார்கள். இதன் காரணமாகத்தான் ஸ்ரீதேவி பாகுபலியில் நடிக்கவில்லை. 

Boney kapoor denied talks of rajamouli about sridevi

ஹோட்டலில் ஒரு தளத்தை முன்பதிவு செய்யுமாறு கேட்டது உண்மைதான். ஏனென்றால் அந்த சமயத்தில் எனது குழந்தைகள் சிறுவர்களாக இருந்தனர். ஆதலால் அப்படி கேட்டோம். ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் தவறாக சொல்லியிருக்கிறார்கள்” என்று தனது நேர்காணலில் கூறியுள்ளார்  போனி கபூர். எனினும் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிகவும் கம்பீரமாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!