கண்ணாடி பாலத்தில் விரிசல்.. சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் மாவட்ட நிர்வாகம் : செல்ஃபி எடுக்கும் அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2025, 4:59 pm

சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா படகு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடல் நீர்மட்டம் சீரற்ற நிலையில் அவ்வப்போது காணப்படுவதால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு முடியாத நிலை இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டது இதனை கடந்த ஜனவரி மாதம் முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் ,

பாலத்தை திறந்தது முதல் கண்ணாடி பாலத்தை பார்வையிடுவதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

மேலும் இந்த பாலத்தின் உறுதி தன்மையை பலமுறை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பாலம் வலுவாக இருப்பதாக தெரிவித்தனர் ஆனால் தற்போது இரண்டாவது முறையாக பாலத்தில் உள்ள கண்ணாடி விரிசில் ஏற்பட்டு உடைந்துள்ளது.

அந்த பகுதியில் மட்டும் தடுப்பு வைத்து அடைத்து விட்டு சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து வருகிறது, கண்ணாடி பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து பழுதடைந்துள்ள பாலத்தின் கண்ணாடியை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!