என் குழந்தைக்கு நீதி வேணும்; கைக்கூப்பி கேட்டுக்குறேன்- முதல்வரிடம் மன்றாடிய மாதம்பட்டியாரின் மனைவி?
Author: Prasad8 September 2025, 5:40 pm
இரண்டாவது திருமணம்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா. மாதம்பட்டி ரங்கராஜ்ஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி உண்டு. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. இந்த நிலையில்தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தெரிய வருகிறது. மேலும் ஜாய் கிரிஸில்டா தான் ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.

மாதம்பட்டியார் மீது புகார்
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு தன்னுடன் மாதம்பட்டி ரங்கராஜ் வாழ மறுக்கிறார் எனவும் தனது குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் தனது குழந்தைக்கு நீதி வாங்கி தருமாறும் அதில் கூறியிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் எனவும் அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஜாய் கிரிஸில்டா தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு தனது குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்றாடியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு நீதி வேண்டும். பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் தரித்தது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. நான் இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.

கர்ப்பத்தின் இந்த முற்றிய நிலையிலும் பார்வையற்ற எனது தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றேன். எனது புகார் என்ன நிலைமையில் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இதற்கிடையில் மாதம்பட்டி ரங்கராஜ் விஐபியாக வலம் வருகிறார். மேலும் அவர் எனக்கு எதிராக ஆபாசமான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார். அப்பா (முக ஸ்டாலின்), உங்கள் அரசாங்கத்தை என்னை போன்ற துரதிஷ்டவசமான பெண்கள் நம்புகிறார்கள். இதில் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் கைக்கூப்பி மன்றாடுகிறேன். எந்த விஐபியும் அல்லது பிரபலமும் பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றத்தை செய்துவிட்டு எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித்திரிய முடியுமா? எனக்கு எனது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும்” என தமிழக முதல்வர் முக ஸ்டாலினை டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Justice for my unborn child.#Appa @CMOTamilnadu @chennaipolice_ @tnpoliceoffl @ArunIPSCOP
— Joy Crizildaa (@joy_stylist) September 8, 2025
It’s been 10 days since I submitted a complaint to the Chennai city commissioner, narrating how celebrity chef and actor Mr. Madhampatti Rangaraj cheated and deceived me into MARRIAGE…
