தமிழகத்தில் திமுக கூட்டணிகள் திருடித்தான் வாக்குகளை பெற்றதா? வாக்கு திருட்டை பற்றி காங்., பேசலாமா?

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2025, 5:46 pm

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் வெளிநாடு சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று நமது பலத்தை காண்பித்து வந்திருக்கிறார். இதனால் தான் நமது டாடியாக முதலீடுகளை ஈர்க்க முடிகிறது.

இதற்கு முன்பு சென்ற போது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார்கள்.
தமிழகத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு தெளிவான கணக்கு கிடையாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்தால் நாம் பாராட்டப்படுவோம் என்று காவல்துறை அதிகாரிகள் நினைத்துக் கொள்கிறார்கள்.

காங்கிரசை சேர்ந்தவர்கள் நேற்று தென்பகுதியில் ஓர் கூட்டம் போட்டிருக்கின்றனர். கூட்டம் போடுவதற்காகவாவது தென் மாவட்டம் நியாபகம் வந்திருக்கிறதே.

ஓட்டு திருடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்து கள்ள ஓட்டிற்கு மிகப் பிரம்மாண்டமான அங்கீகாரத்தை கொடுத்தது திமுக தான். கள்ள ஓட்டை கலாச்சாரமாக மாற்றிய திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு சிதம்பரம் பேசுகிறார்.

செல்வப் பெருந்தகை கூட்டணியை விட்டு வெளியே வர தைரியம் இருக்கிறதா?
கம்யூனிஸ்டுகள் கொள்கையை மறந்து திமுகவுடன் இருக்கிறது.

திருமாவளவனுக்கு பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்தாலும் கவலை கிடையாது. வேங்கை வயல் பிரச்சனையை பற்றி கவலை கிடையாது.

கூட்டணிக்காக கட்சிகளின் கொள்கை மறக்கடித்து திமுக அவர்களுடன் வைத்துள்ளது. நாளை, பாரத தேசத்தின் துணை குடியரசு தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாளை மறக்க முடியாத தினம்.

திமுக காங்கிரஸ்சை மன்னிக்க முடியாத தினம்.தமிழர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்க்கு எதிராக திமுகவை சேர்ந்தவர்கள் வாக்களிக்க போகின்றனர்.

ஜெர்மனியில் தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம் என்று சொல்கிறார். டெல்லியில் எங்கு அதிகாரம் கொடுக்கிறீர்கள். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இங்கு ஆட்சியில் அங்கு அரசியலில் ஸ்டாலினை வருங்கால தமிழ் சமூகம் மன்னிக்காது

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவிடம் இருந்து 27 கிலோ தங்கம், 2000 கோடி பணம் கைப்பற்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
காங்கிரஸ் எல்லா திருட்டையும் செய்வார்கள் பிடிக்க போனால் பழிவாங்குகின்றனர் என்று சொல்வார்கள்.

வாக்குத்திருட்டு என்று சொல்கிறார்களே மக்களின் வரிப்பணத்தை திருடியது காங்கிரஸ். இன்று தமிழ்நாட்டில் ஏழு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளார்கள். அந்தக் கூட்டணி வலுவான கூட்டணி தான். அதிமுக உட்கட்சியில் சில பிரச்சனைகள் வந்தால் அதை அந்த கட்சி தீர்த்துக் கொள்ளும்.

ஆசிரியர் தினத்தில் நாங்கள் ஆசிரியர்களுக்கு பாதுகாவலராக இருப்போம் என்று சொல்கிறார்கள். ஆசிரியர்கள் போராடுகிறார்கள், மருத்துவர்கள் போராடுகிறவர்கள் . 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!