ஒரிஜினல் பாட்டை விட அசத்தலான குரல்? ரோஜா ரோஜா பாடல் மூலம் டிரெண்டிங்கான இளைஞர் யார் தெரியுமா?

Author: Prasad
9 September 2025, 10:38 am

ரஹ்மானின் கிளாசிக் பாடல்

1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த “காதலர் தினம்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் ஃபேவரைட்டான திரைப்படமாகும். ஏ ஆர் ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மரண ஹிட் அடித்தன. அந்த வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ரோஜா ரோஜா” என்ற பாடல் மிகப் பிரபலமான பாடலாகும். இப்பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார். வாலி இப்பாடலை எழுதியிருந்தார். 

Singer satyan mahalingam roja  roja song viral in internet

இந்த நிலையில் இப்பாடல் மீண்டும் டிரெண்டிங்காகி வருகிறது. அதுவும் வேறு ஒரு இளைஞரின் குரலில். 1999 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் மேடையில் இப்பாடலை பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த குரல் பலரையும் மெய்மறக்க செய்துவிட்டது. இணையத்தில் பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். 

யார் அந்த இளைஞர்?

இந்த நிலையில் அந்த இளைஞர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞரின் பெயர் சத்யன் மகாலிங்கம். இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் பாடுவதில் திறமை கொண்டவர். மிகப்பெரிய பாடகர் ஆகவேண்டும் என்பதுதான் இவரது லட்சியம். 

அந்த வகையில் “வசூல்ராஜா எம்பிபிஎஸ்” படத்தில் கலக்கப்போவது யாரு,  “துப்பாக்கி” படத்தில் குட்டிப்புலி கூட்டம், “கழுகு” படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் போன்ற பல பாடல்களில் இவரது குரல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

Singer satyan mahalingam roja  roja song viral in internet

இந்த நிலையில்தான் இவர் 1999 ஆம் ஆண்டு ஒரு இசை கச்சேரியில் “ரோஜா ரோஜா” பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “இந்த வைரல் வீடியோ அவருக்கு இனி வருங்காலத்திலாவது வாய்ப்புகள் பெற்றுத்தரட்டும்” என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!