சொன்னதை செய்த தமிழக முதல்வர்? இளையராஜா ரசிகர்களை குதூகலப்படுத்தும் அறிவிப்பு…

Author: Prasad
9 September 2025, 2:10 pm

இசை புத்தர்

இசைஞானி என்று பலராலும் கொண்டாடப்படும் இளையராஜா, மூன்று தலைமுறை ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருபவர். அவரது உருவத்திற்குதான் வயதானதே ஒழிய அவரது இசை எப்போதும் இளமையாகவே இருக்கிறது. இசை துறையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள இளையராஜா சமீபத்தில் லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். 

சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு இளையராஜா தமிழகம் வந்தபோது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.  அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு விழா விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். 

Ceremony for Ilaiyaraaja by tamilnadu government

சொன்னதை செய்த முதல்வர்

அந்த வகையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி இளையராஜாவின் பொன்விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த பாராட்டு விழா மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இளையராஜாவின் பாராட்டு விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த அறிவிப்பால் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!