வீல் சேர் தராததால் கொடுமை… நடக்க முடியாத தந்தையை இழுத்து சென்ற மகன்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan10 September 2025, 12:54 pm
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களுக்கு வாகனங்களில் அழைத்து செல்ல போதிய சக்கர நாற்காலிகள் ஸ்ட்ரெச்சர் போன்றவை இல்லாததால் ஆத்தரமுற்ற நபர் தனது தந்தையை தானே தூக்க முடியாமல் இழுத்து சென்ற அவல நிலை கோவை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வீல் சேர் மற்றும் ஸ்ரெக்சருக்காக காத்திருந்த நிலையில் ஊழியர்கள் யாரும் ஒத்துழைப்பு நல்கவில்லை என பாதிக்கபப்ட்ட தரப்பினர் கூறுகின்றனர் . மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கவோ உதவி கோரவோ வரவேற்பு பகுதியில் ஊழியரகளே இல்லாத நிலை நீடிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
காலில் சிகிச்சை முடிந்த பின் புறப்பட்ட நோயாளிக்கு வீல் சேர், ஸ்ட்ரெக்சர் கேட்டும் நீண்ட நேரம் காக்க வைத்ததால் தனது தந்தையை தானே இழுத்து சென்ற அவல சம்பவம் கோவை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது#Trending | #viralvideo | #Coimbatore | #GH | #GovernmentHospital | #DMKGovt |… pic.twitter.com/H0EUnB8G3y
— UpdateNews360Tamil (@updatenewstamil) September 10, 2025
இந்த நிலையில், வீல் சேர் கொடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட புகாரில் கோவை அரசு மருத்துவமனை சூப்பர்வைசர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
