இதெல்லாம் தேவையில்லாத ரிஸ்க்- சிம்ரன் எடுத்த திடீர் முடிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Author: Prasad
11 September 2025, 11:03 am

கனவுக்கன்னி

1980களில் பிறந்தவர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்தான் சிம்ரன். தனது கண்கவர் அழகினாலும் சிக்கான இடையினாலும் ரசிகர்களை கவர்ந்த சிம்ரன் சமீப காலமாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். எனினும்  அவர் நடித்த “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையில்தான் சிம்ரன் ஒரு புது பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளாராம்.

Simran started own production company

சிம்ரன் எடுத்த திடீர் முடிவு

நடிகை சிம்ரன், “போர் டி மோசன் பிக்சர்ஸ்” என்ற பெயரில் ஒரு புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு வரும் சிம்ரன், தற்போது தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க முற்பட்டுள்ளார். 

இத்திரைப்படத்தை ஷ்யாம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இதில் சிம்ரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இவருடன் நாசர், தேவயானி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளார்களாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

சிம்ரனுக்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லை என கூறப்படுவது உண்டு. அந்த வகையில் சிம்ரன் தயாரிப்பில் அவரே நடிப்பது பெரிய ரிஸ்க் என்று பலரும் கூறி வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!