ரயிலில் போளி விற்கும் முதியவருக்கு ராகவா லாரன்ஸ் செய்த மிகப்பெரிய உதவி! நெகிழ்ச்சி சம்பவம்…

Author: Prasad
11 September 2025, 1:26 pm

சமூக சேவைக்கு பெயர் போன நடிகர்

டான்ஸ் மாஸ்டரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீப காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவற்றோருக்கும் மற்றும் பல திருநங்ககைகளுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இவரது செயல் மிகவும் கவனிக்கத்தக்க செயலாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அவர் செய்யவுள்ள ஒரு நிதியுதவி ரசிகர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Raghava lawrence ready to give one lakh to 80 years old sweet seller

போளி விற்கும் முதியவருக்கு நிதியுதவி!

அதாவது ரயிலில் போளி விற்கும் 80 வயது முதியவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “சென்னையில் 80 வயடு முதியவரும் அவரது மனைவியும் இனிப்புகள் மற்றும் போளி தயாரித்து ரயில்களில் விற்று வருவதை பற்றிய ஒரு பதிவு சமூக ஊடகங்களின் மூலம் இன்று எனக்கு கிடைக்கப்பெற்றது. அவர்களின் மன உறுதி என்னை மிகவும் நெகிழ வைத்தது. 

அவர்களை ஆதரிக்க ஒரு லட்சம் பங்களிக்க நான் தயாராக இருக்கிறேன். அது அவர்களுக்கு ஆறுதலையும் பலத்தையும் தரும் என நம்புகிறேன். அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. யாருக்காவது அவர்களின் விவரங்கள் தெரிந்தால் தயவு செய்து என்னை தொடர்புகொள்ளவும். நீங்கள் அவர்களை ரயிலில் பார்க்க நேர்ந்தால் அவர்களிடம் இனிப்புகள் வாங்கி உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும்” என கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இச்செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!