உங்க பேச்சை நான் கேட்கணுமா? ராகுல் காந்தியுடன் மல்லுக்கட்டிய அமைச்சர்!
Author: Udayachandran RadhaKrishnan13 September 2025, 1:02 pm
உத்தரப் பிரதேசம் லக்னோவின் ரேபரேலியில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ரேபரேலி எம்.பி.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தின் நடுவில் அமைச்சர் தினேஷ் பேச தொடங்கியதை ராகுல் காந்தி எதிர்த்து, “கூட்டத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன். பேச விரும்பினால் முதலில் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
In the DISHA meeting, LoP Rahul Gandhi ji humbled down BJP minister Dinesh Pratap Singh.
— India With Congress (@UWCforYouth) September 12, 2025
The meeting, chaired by Rahul Gandhi ji was attended by MPs and MLAs from Amethi and Rae Bareli, including Singh. pic.twitter.com/tXzJSWovAg
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், “மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்?” என்று எதிர்வினை தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
