நாளை விஜய் வருகை… கொள்கை தலைவர் பெரியாரின் சிலையை மறைத்து பதாகைகளை வைத்த தவெகவினர்!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2025, 4:49 pm
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உங்க விஜய் நான் வரேன் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்கிற பெயரில் பொதுமக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் திருச்சியில் சுற்று பயணத்தை மேற்கொண்டார் இரண்டாம் கட்டமாக நாளை நாகப்பட்டினம் பகுதியில் மேற்கொண்டு அங்கிருந்து திருவாரூரில் சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் திருவாரூர் தெற்கு வீதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை துறை சார்பில் 25 நிபந்தனைகளுடன் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினரின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு பிரசாரத்துக்கான முன்னேற்பாடு பணிகளில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைகள் இருபுறங்களிலும் கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணியும் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பணிகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகையில் உரையாற்றக் கூடிய புத்தூர் அண்ணாசிலை பகுதியல் உள்ள தந்தை பெரியார் சிலையை மறைத்து தவெகவினர் பதாகை வைத்து மறைப்பு

தவெக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் சிலையை மறைத்து பேனர் வைத்துள்ளாதால் விமர்சனம் எழுந்துள்ளது. அதே பகுதியில் அண்ணா சிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது
