மேடையில் பேசும் போது கூட்டத்தினரின் கவனத்தை திசை திருப்பிய செந்தில் பாலாஜி.. கடுப்பான திருச்சி சிவா!
Author: Udayachandran RadhaKrishnan22 September 2025, 6:54 pm
கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் திமுக சார்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது புகைப்படம் எடுப்பதற்காக தனியார் நாளிதழ் புகைப்பட கலைஞர் ஒருவர் மற்றும் செந்தில் பாலாஜி தாமதமாக மேடைக்கு ஏறி வந்த போது பொதுமக்கள் அனைவரும் செந்தில் பாலாஜி பார்த்தனர். அப்போது மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக எழுந்தனர்.
அப்போது திருச்சி சிவா பேசுவதை நிறுத்தி விட்டு கோபமடைந்தார், யோவ் யாரா இருந்தா என்ன அவர் பாட்டுக்கும் தான் வராரு நீங்கள் ஏன் அங்கு பார்க்கிறீர்கள் நான் அடி வயிற்றிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என கோபமாக கூறினார்.
அப்போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜி, திருச்சி சிவாவுக்க சால்வை அணிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தார்.
அப்போது திருச்சி சிவா பேச ஆரம்பித்தபோது நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென பேச்சை நிறுத்தியதால் திமுக தொண்டர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றனர். அவர்களைப் பார்த்து உடன் கோபம் அடைந்த அவர் உக்காரியா என ஆவேசத்துடன் கூறினார்.
