பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்.. ஷாக் வீடியோ.. 2 மணி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2025, 3:49 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு என்பவர் தனது நான்கு வயது ஆண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.

தனது இருசக்கர வாகனத்தில் வீட்டு நுழைவு வாயிலில் அழைத்து சென்றார். அப்போது வீட்டு முன் நின்றிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் மிளகாய் பொடி தூவி குழந்தையை கடத்தினான்,

விடாமல் துரத்திய தந்தை முயன்றும் முடியவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது.
பட்டப் பகலில் நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை குடியாத்தம் நகர போலீசார் ஆராய்ந்து வந்தனர். கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

பின்னர் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரை சோதனையிட முயன்றனர். குழந்தையை கடத்தி சென்ற கார் அருகில் தான் இருக்கும் என உணர்ந்த போலீசார், உடனே சோதனைச்சாவடிக்கு தகவல் அளித்தனர்.

போலுசார் நெருங்கியதை அறிந்த கடத்தல் கும்பல் குழந்தையை மாதனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றது. இதையடுத்து குழந்தையை மீட்ட காவல்துறை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!
  • Leave a Reply