தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு? உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ்.. 70 கி.மீ துரத்திய உறவினர்கள்..!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2025, 1:29 pm
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனராக வேலை செய்யும் விக்னேஷ் – கிருத்திகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று நடைபெற்ற முகாமில் இரண்டு வயதிற்கான தடுப்பூச்சி போடப்பட்டுள்ளது.
வீட்டுக்கு திரும்பியதும் குழந்தையை உறங்க வைத்த நிலையில் குழந்தை எழாததால் இன்று அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றதை கண்டித்து வாணியம்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை வரை சுமார் 70 கிலோ மீட்டர் ஆம்புலன்சை உறவினர்கள் துரத்தினர்.

தற்போது அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்து குழந்தையின் உடலை கேட்டும், தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக கூறி, உரிய நீதி வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
