நீளமாக முடி வளர வேண்டுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க!

14 February 2020, 1:01 pm
Simran updatenews360
Quick Share

பெரும்பாலான   பெண்கள் நீளமாக அடர்த்தியான கூந்தல்  வேண்டுமென்றே ஆசைப்படுகிறார்கள். ஆனால்   கூந்தல் உடைந்து போவது மற்றும் போஷாக்கு   குறைவு காரணமாக கூந்தல் வளர்ச்சி குறைந்துவிடுகிறது.   கூந்தல் நீளமாக வளர எளிமையான வழிமுறைகளை இங்கு காணலாம்.   

Simran updatenews360

கண்டிஷ்னர்   உபயோகியுங்கள்:

உங்களுடைய   உச்சந்தலை முடியை   விட கீழே உள்ள முடி  வலுவிழந்ததாக இருக்கும்.   இதற்கு காரணம் நம் முடியில்  ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதே.  முடி வலுவாகவும், வேர்க்கால்கள் உடையாமலும்   இருப்பதற்கு நீங்கள் கண்டிஷனர் உபயோகிக்கலாம். தலைக்கு  குளித்தவுடன் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இதை தொடர்ந்து   செய்தால் உங்கள் வலுவாகவும் மற்றும் பளபளப்புடனும் இருக்கும்.

மசாஜ்  செய்யலாம்:

வாரம் ஒரு  முறை உங்கள்   முடிக்கு மசாஜ் செய்யலாம்.  தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில்  மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை   கலந்து உங்கள் தலைக்கு மசாஜ் செய்யலாம். இதை  வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் முடிக்கு போஷாக்கு   கிடைத்து, முடி வலுவடையும். ஆனால் இந்த எண்ணையை சூடாக   பயன்படுத்தும் பொது உங்களுக்கு தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்றவை   குறையும். தலை குளிர்ச்சியாகவும் இருக்கும். அதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன்  இருப்பீர்கள்.

தலைமுடியை  சீவுதல்:

தினமும்   தூங்கும்முன்பு   உங்கள் தலைமுடியை  சீவிவிட்டு தூங்க வேண்டும். தலையை  வாரினால் அதிகமாக முடி உதிரும் என்றுதான்  நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் அது  அப்படியில்லை, நீங்கள் சீவும் சீப்பை பொறுத்தே உங்கள்  தலைமுடி உதிர்வது அமைகின்றது.

சிந்தடிக் பிரிஸ்ட்ல் (synthetic bristles)  மற்றும் போர் பிரிஸ்ட்ல் ( boar bristle brush)   போன்ற சீப்புகளை நீங்கள் உபயோகிக்கலாம். இதை செய்தால்  உங்கள்முடிஉதிராவது. குறைந்தது 50 முறையாவது உங்கள் முடியை  இரவு தூங்கும் முன்பு நீங்கள் சீவ வேண்டும்.

ஈரமான  கூந்தலை  கட்டாதீர்கள்:

 உங்கள்   முடி ஈரமாக  இருக்கும் போது, அதை  துணியால் கட்டக்கூடாது.  அப்படி செய்தால் துணியில்  உள்ள ஏராளமான இழைகள், நம் தலையில்  உள்ள முடிகளை இழுத்து முடிஉதிர்தலை  உண்டாக்கும். முடியை அதிகமான நேரம் துணியால்   கட்டியிருந்தால் முடி உதிர்வு மற்றும் முடி உடைத்தல்   உண்டாகும்.

முட்டையை   தலைக்கு உபயோகிக்கலாம்:

முட்டை   அதிகமான   போஷாக்கு நிறைந்த  ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல்   இதில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால்  முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவை  எடுத்துக்கொள்ள வேண்டும். பின்புஅதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.  இந்தமாஸ்க்கை உங்க முடிகளில் தேய்த்தால் முடி நன்கு போஷாக்குடன் நீளமாக வளர்ச்செயும். இதை  மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் பயன்படுத்தலாம். முட்டையை தலையில் அப்ளை செய்தவுடன், 20 நிமிடங்கள்   கழித்து தலையை அலசிக் கொள்ளலாம். தலையை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் முட்டை வாசம் அடிக்கும். இந்த  5 முறைகளை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும் தோழிகளே உங்கள் முடி நீளமாக வளர செய்யும்.