பாட்டி வைத்திய முறைப்படி, சருமத்தை அழகாக்கும் குளியல் பொடியை தயாரிப்பது எப்படி?

25 March 2020, 11:20 pm
herbal powder updatenews360
Quick Share

சிலருக்கு   தற்காலத்தில்   பயன்படுத்தப்படும்   சோப்பு செயற்கை ரசாயனம்  மற்றும் நிறமூட்டிகள் சேர்த்து   தயாரிக்கப்படுவதால் உடலுக்கு ஒத்துக்   கொள்ளாமல் அலர்ஜி மற்றும் அரிப்பு போன்ற   பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். இனி நீங்கள் அதைப்பற்றி   கவலைப்பட வேண்டாம். அதனால் இயற்கையான முறையில் சருமத்தை அழகாகவும், மணமாகவும்   மாற்றும் குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.

herbal powder updatenews360

குளியல் பொடி தயாரிக்கும் முறை

தேவையான  பொருட்கள்:

வேப்பிலை – 50 கிராம்

பச்சைப்பயறு – 200 கிராம்

கடலப்பருப்பு – 100 கிராம்

ரோஜா இதழ் – 150 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்  (ஆண் குழந்தைக்கு – 10 கிராம்)

ஆரஞ்சு தோல் – 3-4 பழத்தின் தோல்கள்

பாதாம் – 10

எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்

செம்பருத்தி பூ – 10

செய்முறை:

 bath powder updatenews360
 • மேலே  குறிப்பிட்டுள்ள   அளவில் வேப்பிலை, ரோஜா இதழ்கஸ்தூரி மஞ்சள், ஆரஞ்சு தோல், இட்லி பூ, செம்பருத்தி பூ   ஆகியவற்றை தனியாக எடுத்து நிழலில் காய வைத்துக் கொள்ளுங்கள்.
 • பின்பு  பச்சைப்பயறு,  பாதாம் மற்றும் கடலப்பருப்பு   ஆகியவற்றை தனியாக எடுத்து அரைத்துக்  கொள்ளவும். பின்பு இந்த இரண்டு பொடிகளையும்  கலக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
 • பின்பு   இதை குளிக்கும்   போது சோப்பிற்கு பதிலாக, இந்த  குளியல் பொடியை பயன்படுத்துங்கள். இது   உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும்   வைத்துக் கொள்ளும். இவற்றால் உங்களுக்கு எந்த பக்க   விளைவுகளும் ஏற்படாது.
 • அதுமட்டுமில்லாமல் இந்த பொடி உங்கள்   உடலில் இருக்கும் இருக்கும் அழுக்கை நீக்கி உடலை நறுமணத்துடன்   வைக்க உதவுகிறது.
 • இந்த   பொடியை குழந்தைகள், ஆண்கள்  மற்றும் பெண்கள் என அனைவருமே  பயன்படுத்தலாம். ஆனால் குழந்தைகளுக்கு   குளியல் பொடியை தயாரிக்கும் போது, கஸ்தூரி   மஞ்சளை தவிர்த்து விட வேண்டும்.
 • இந்த பொடி உங்களை   நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நறுமணத்துடனும் வைக்க   உதவுகிறது. இத்தனை நன்மைகள் உள்ள குளியல் பொடியை நீங்களும்   வீட்டில் தயார் செய்து பயன்படுத்திப்பாருங்கள் நண்பர்களே.

இந்த   குளியல்   பொடியை பயன்படுத்துவதால்  ஏற்படும் நன்மைகள்:

 • நம்முடைய   தோலுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள் எளிதில்  கிடைத்து விடுகின்றன.
 • இயற்கையாவே   சருமம் பொலிவு பெரும்.
 • பளிச்சென்ற தோல்   முன்ன செய்யும்.
 • வியர்வை   நாற்றம் வீசுவது   தடுக்கப்பட்டு நறுமணம்  கமழும்.
 • சருமம்   ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும்  இருக்கும்.