திருமணத்திற்கு தயாராகுபவரா நீங்கள்… அதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்!!!

15 January 2021, 8:47 pm
Quick Share

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம். திருமணத்திற்கு பிறகு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பல விதமான ஆசைகளை உங்கள் மனதில் நீங்கள் வளர்த்து இருக்கலாம். ஆனால் உண்மையில் அதற்கு முன்பாக நீங்கள் சில சுவாரஸ்யமான விஷயங்களை செய்ய வேண்டும். இப்போது இதனை மிஸ் பண்ணி விட்டால் அதனை எப்போதுமே செய்ய முடியாமல் போய்விடும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.     

1. உங்கள் உறவினர்கள் / நண்பர்களுடன் ஒரு பயணத்திற்கு செல்லுங்கள்: 

சில நேரங்களில், சிலருக்கு தாங்கள் சரியான நபரை திருமணம் செய்கிறார்களா என்று குழப்பமடைகிறார்கள். அவர்களால் நிலைமையை பகுப்பாய்வு செய்ய முடியாமல் போகலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், நீங்கள் சரியானதைச் செய்கிறீர்களா என்பதை அறிய உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவலாம். அவர்கள் உங்களை நன்கு அறிந்திருப்பதால், நீங்கள் திருமணம் செய்யத் தயாரா என்பதை உணரவும், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஏற்றதாக உள்ளாரா என்பதையும்  அவர்கள் உங்களுக்கு கூற முடியும். 

2. உங்கள் துணையுடன்  தரமான உரையாடலை மேற்கொள்ளுங்கள்:  

உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையுடன் உங்கள் வாழ்க்கையை  புதிதாக தொடங்கவிருப்பதால், அவருடன் தரமான உரையாடலை நடத்துவது முக்கியம். திருமணத்திற்கு முன், நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஒருவருக்கொருவர் விருப்பங்கள், விருப்பு வெறுப்புகள், பாதிப்புகள் போன்றவற்றை நீங்கள் நன்கு அறிந்து கொள்வீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்  கொள்ளாவிட்டால், நீங்கள் ஒருவருக்கொருவர்  பொருத்தமானவரா என்பதை நீங்கள் அறிய முடியாது. மேலும், இது  ஒருவருக்கொருவர் வலுவான பிணைப்பை வளர்த்துக் கொள்ள இது உங்களுக்கு உதவும். 

3. சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்:  நீங்கள் சமைப்பதை பற்றி  எதுவும் தெரியாதவராக இருந்தால், சில அடிப்படை சமையல் வகைகளை சமைக்க கற்றுக்கொள்வது நல்லது. உங்கள் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், உங்கள் துணைவருடன் இணக்கமாக இருப்பதற்கு இது உதவும் என்பதால் நீங்கள் எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாய்க்கு ருசியாக சமைத்து போடும் போது உங்கள் துணவர்  மகிழ்ச்சியடைவார். உண்மையில், இது காலப்போக்கில் உங்கள் பிணைப்பை பலப்படுத்தும். 

4. உங்கள் தாயுடன் நேரத்தை செலவிடுங்கள்:  

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக உங்கள் அம்மாவை மிஸ் பண்ணுவீங்க. அவர் உங்களுக்காக சமைத்து கொடுப்பது, உங்களுக்காக  ஆடைகளைத் தேர்ந்தெடுத்து தருவது போன்ற பல விஷயங்கள் இதில் அடங்கும். மறுபுறம், நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், முன்பு போல உங்கள் தாயுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். எனவே திருமணம் செய்வதற்கு முன்பு, உங்கள் தாயுடன் சிறிது நேரம் செலவிட அறிவுறுத்தப்படுகிறது.  

5. உங்கள் மனதில் உள்ள  விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளுங்கள்: 

உங்கள் மனதில் உள்ள அத்தனை ஆசைகளையும்   நிறைவேற்ற வேண்டிய  நேரம் இது. ஏனெனில் திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு நிறைய   பொறுப்புகள் வந்துவிடும். அதனால் நேரம் கிடைக்கும்போதே அவற்றை நிறைவேற்றுவது புத்திசாலித்தனம். 

Views: - 7

0

0