இன்ஸ்டன்ட் குலோ வேண்டுமா… அவகேடோ ஓட்ஸ் ஃபேஷியல் டிரை பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
22 March 2023, 4:57 pm

நம் சருமம் தெளிவாகவும், பொலிவோடும் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. தோல் பராமரிப்பு வழக்கத்தில் உரித்தல் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் சருமத்தை இயற்கையான பொருட்களைக் கொண்டு பார்த்துக்கொள்ளுங்ஙள். பொலிவான சருமத்திற்கு வெண்ணெய் பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு ஒரு ஃபேஸ் ஸ்க்ரப் எப்படி செய்வது என்று பார்ப்போம். இது அனைத்து தோல் வகைகளுக்கும் நல்லது மற்றும் தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.

  1. முதலில் வெண்ணெய் பழத்தை அரைத்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் ஓட்ஸை எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் அவகேடோ பேஸ்ட் சேர்க்கவும். இவற்றை நன்கு கலக்கவும்.
  3. பிறகு ½ டீஸ்பூன் தேனைச் சேர்த்து கலக்கவும்.
  4. இதனை உங்கள் முகத்தில் நேரடியாக தடவி 5-10 நிமிடங்களுக்கு உங்கள் தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  5. சுமார் 10-15 நிமிடங்கள் வைத்திருந்து சாதாரண நீரில் கழுவலாம்.

பலன்கள்:
ஓட்ஸ் அனைத்து தோல் வகைகளுக்கும் ஒரு அற்புதமான ஸ்க்ரப்பாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது. இது தெளிவான பிரகாசத்தை அளிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?