கருமையான கூந்தல் வேண்டுமா? கருவேப்பிலை மாஸ்க் செய்து உபயோகியுங்கள்!

15 February 2020, 4:56 pm
curri leaf
Quick Share

பெண்களை   அழகாக காண்பிப்பதில்   கூந்தலுக்கும் முக்கிய பங்கு  உள்ளது. அதுவும் சிலருக்கு கூந்தல்   செம்பட்டை வண்ணத்தில் இருக்கும். ஆனால்   எல்லோறும் விரும்புவது கருமையான கூந்தலே.  அதற்கு நீங்கள் கருவேப்பிலை மாஸ்க் செய்து   உங்கள் தலைக்கு நீங்கள் போட்டுக் கொள்ளலாம். அது உங்கள்  முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது மட்டுமில்லாமல் முடியை  கருமையாவும் பாதுகாக்க செய்கின்றது. 

கூந்தலை  பராமரிப்பதில்  பெண்கள் அதிக கவனம்   செலுத்த வேண்டும். இதற்காக   நீங்கள் அதிகம் செலவிடத் தேவையில்லை.  உங்கள் வீட்டிலே இருக்கும் கறிவேப்பிலை   போதும் உங்கள் தலையை காப்பாற்றுவதற்கு, இதை   ட்ரை செய்து பாருங்கள்.

curri leaf updatenews360
  • வெந்தயம் 2 ஸ்பூன் , சீரகம் 2 ஸ்பூன், கறிவேப்பிலை  ஆகியவற்றை உங்களுக்கு தேவையான எடுத்துக் கொள்ளலாம். 
  • உங்கள்  கூந்தலுக்கு   தேவையான அளவு சீரகம்  மற்றும் வெந்தயத்தை ஒரு நாளுக்கு   முன்பே ஊற வைக்க வேண்டும்.
  • நன்கு ஊற  செய்த வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கறிவேப்பிலை தலையை   கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சேர்த்து அரைக்க வேண்டும்.
  • இதை   தலையில்   தடவிக்கொண்டு 45 நிமிடங்கள்  அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு  முடியை அலசிக் கொள்ளலாம். இதே போல் வாரத்திற்கு   இரு முறை செய்து வந்தால் முடி கருகருவென மின்ன செய்யும்.
  • கறிவேப்பிலையை   நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு நல்லெண்யை சூடாக்கி அதில் வாடிய   கறிவேப்பிலையை போட்டுக் கொள்ளவும். ஆற வைத்த பின்பு  தலைக்கு தடவிக் கொள்ளலாம். இதே போல் வாரம் மூன்று  செய்து வந்தால் கூந்தல் நன்கு வளரும். அதைத்தவிர இளநரை  மறைந்துவிடும்.
  •   செம்பருத்தி பூ, கறிவேப்பிலை  மற்றும் மருதாணியை தனித்தனியாக   காய வைத்துக் கொள்ளவும். பின்பு இதை   ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொண்டு தேங்காய்   எண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும்.பின்பு இதை ஆறவைத்து   உங்கள் தலைக்கு தடவி வரலாம். இதை செய்தால் முடியின் வேர்க்கால்கள்  வலுவடையும். 
  • கறிவேப்பிலையை   நன்கு அரைத்து அதில்   தயிர் சேர்த்துக் கொள்ளவும். பின்பு இதை  ஒரு மாஸ்க் போல உங்கள் தலையில் போட்டுக்  கொள்ளலாம். அரைமணி நேரம் கழித்து உங்கள் தலையை அலசிவிட  வேண்டும். இப்படி வாரத்திற்கு இருமுறை செய்தால் உங்கள் முடி  பளிச்சென்று மின்னும். பொடுகு பிரச்சனையை வராது. முடி நீளமாக வளர  செய்யும்.
  • கறிவேப்பிலை   பொடியை தினமும்  உணவில் சேர்த்து உண்டு  வந்தால் முடி வளர்ச்சி அடைவது  மட்டுமில்லாமல், கருமை நிறமும் பெறும். இவை  எல்லாம் நீங்கள் வீட்டிலே செய்து தலைக்கு போட்டுக் கொள்ளலாம், எளிமையானதாக  இருக்கும் தோழிகளே! 

Leave a Reply