தலைமுடிக்கு எண்ணெய் தடவும்போது மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!!

14 January 2021, 6:05 pm
Quick Share

தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது நீங்கள் செய்யும் சிறந்த முடி பராமரிப்பு சிகிச்சையாக கருதப்படுகிறது. ஹேர் ஆயிலிங் உங்கள் மந்தமான, உலர்ந்த மற்றும் சேதமடைந்த தலைமுடிக்கு சிறந்த தீர்வாக அமையும்.  இது உங்கள் தலைமுடிக்கு பளபளப்பு, வலிமை மற்றும் ஆரோக்கியத்தை சேர்க்கிறது. மேலும் நீளமான மற்றும் நறுமணமுள்ள முடியை இதன் மூலம் நீங்கள் பெறலாம். தலைமுடிக்கு  எண்ணெய் தேய்ப்பதால் இத்தனை பெரிய நன்மைகள் கிடைக்கும்  என்று நிச்சயமாக நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.  

ஆனால், முடிக்கு  எண்ணெய் தடவுவதால் ஏற்படும் இந்த அற்புதமான நன்மைகளைப் பெற, நீங்கள் அதை சரியாக செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நன்றாக செயல்படும் இந்த ஹேர் ஆயில் மசாஜ் உங்களுக்கு ஏன் வேலை செய்யவில்லை என்றால் அதற்கு காரணம் நீங்கள் அதை சரியாக செய்யாதது தான். எனவே, உங்கள் ஆசைப்படி தலைமுடியைப் பெற இந்த பொதுவான முடி எண்ணெய் தவறுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.   

1. எண்ணெயை சூடாக்காமல் பயன்படுத்துவது: 

தலைமுடியை  மசாஜ் செய்ய நீங்கள் குளிர்ந்த  எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்களா? இதனை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். குளிர்ந்த எண்ணெய் ஒரு தடிமனான நிலைத்தன்மையை பெற்றிருக்கும். எண்ணெய் சூடாக இருக்கும்போது, ​​அது மெல்லியதாகி, உங்கள் உச்சந்தலையில் ஆழமாகவும் விரைவாகவும் ஊடுருவும். இது உங்கள் உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களால்   விரைவான உறிஞ்சப்பட்டு  விரைவான முடிவுகளைக் காட்ட உதவுகிறது.  எண்ணெய் மந்தமான சூட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உச்சந்தலையை எரிக்கும் அளவிற்கு அதிக சூடாக இருக்கக்கூடாது. 

2. தலைக்கு மசாஜ் செய்யாமல் இருப்பது:  தலைக்கு மசாஜ் செய்யாமல் உங்கள் தலைமுடிக்கு மட்டும் எண்ணெய் தேய்ப்பது  முழுமையடையாது. உண்மையில், மசாஜ் தான் எண்ணெய் தேய்ப்பதை முழுமையாக்குகிறது.  ஹேர் ஆயில் உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றிருப்பதால், ​​வட்ட இயக்கங்களில் அதனை  உச்சந்தலையில் மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மயிர்க்கால்களை தூண்டுகிறது. எனவே, உங்கள் தலைமுடிக்கு 3-5 நிமிட மசாஜ் கொடுக்கவும்.  

3. அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டாம்:

தலை மசாஜ் என்று  வரும்போது, ​​நாம் செய்யும் ஒரு பெரிய தவறு உச்சந்தலையில் அதிக நேரம் மசாஜ் செய்வதுதான். மசாஜ் செய்வது உங்களுக்கு நிச்சயமாக நல்ல மற்றும் நிதானமான உணர்வை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை அதிக நேரம் செய்வது உதவப் போவதில்லை. நீண்ட நேரம் மசாஜ் செய்வது, உங்கள் இழைகளை பலவீனப்படுத்துகிறது மற்றும் உங்கள் தலைமுடியில் சிக்கல்களை ஏற்படுத்தும். இது இறுதியில் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே, 5-10 நிமிடங்களுக்கு மட்டும் மசாஜ் செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.  

4. தலைமுடியை விரைவாக கழுவுதல்: 

தலைக்கு எண்ணெய் தேய்த்த பிறகு அது எவ்வளவு நேரம் ஊற வேண்டும்? எண்ணெயை தடவிய சில நிமிடங்களிலே அதனை கழுவி விடுவது  எண்ணெய் தேய்ப்பதன்  நோக்கத்தையே  தோற்கடித்து விடும். ஹேர் ஆயில் இயற்கையாகவே அடர்த்தியான நிலைத்தன்மையைக் கொண்டிருக்கிறது. மேலும் உங்கள் தலைமுடி எண்ணெயின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை பெற அதனை சிறிது நேரம்  ஊறவைக்க வேண்டும்.  எனவே, சில ஆச்சரியமான முடிவுகளை பெற  எண்ணெயை  குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஊற வைக்க  வேண்டும். 

5. தலைமுடிக்கு சீப்பு போடுதல்: 

மிகவும் பொதுவான ஹேர் ஆயிலிங் தவறுகளில் ஒன்று உங்கள் தலைமுடியை சீப்பு போட்டு சீவுவது. எண்ணெய் தடவும்போது, ​​உங்கள் தலைமுடி வேர்களில் பலவீனமாக இருக்கும். எனவே, கூந்தலில்  சீப்பு போடுவது மயிர்க்கால்கள் மீது அழுத்தம் கொடுக்கிறது. இது முடி உதிர்தல் மற்றும் முடி உடைப்புக்கு வழிவகுக்கும். தவிர, புதிதாக எண்ணெயிடப்பட்ட முடியை அவிழ்க்க முயற்சிப்பது உங்கள் தீவிர முடி உதிர்தலுக்கு மற்றொரு காரணம். எனவே, எண்ணெய் தடவிய பிறகு உங்கள் தலைமுடியை ஒருபோதும் சீப்பு போடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

6. எண்ணெயை இரவு முழுவதும் ஊற வைப்பது:  பல முடி நிபுணர்கள் இந்த பழக்கத்திற்கு எதிராக   பரிந்துரைக்கின்றனர். ஒரே இரவில் உங்கள் தலையில் எண்ணெயை விட்டு விடுவது, ​ மயிர்க்கால்களைத் தடுக்கும் மற்றும் முடி உதிர்தல் மற்றும் பொடுகு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அழுக்கு மற்றும் கசப்பை உண்டாக்கும். எனவே, இரண்டு மணி நேரத்திற்கு மேல் எண்ணெயை ஊற விட வேண்டாம்.

Views: - 4

0

0