உங்கள் வீட்டில் எப்போதும் நறுமணம் வீச வேண்டுமா… இத மட்டும் பண்ணா போதும்!!!

20 February 2021, 9:33 pm
Quick Share

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாசனை இருக்கிறது. உங்கள் வீட்டில் ஒரு நறுமணத்தை உருவாக்க பல காரணங்கள் ஒன்றாக சேர்ந்து  செயல்படுகின்றன. அது உட்புற தாவரங்கள், ஷூ ரேக்கில் உள்ள காலணிகள், குப்பைத் தொட்டி, உங்கள் செல்லப்பிராணி போன்றவை அடங்கும்.  இந்த எல்லாவற்றின் வாசனையும் ஒன்றிணைந்து உங்கள் தங்குமிடத்தின் தனித்துவமான வாசனையை உருவாக்குகின்றன.

நீங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டைத் தவறாமல் சுத்தம் செய்து கொண்டிருக்கலாம்.  மேலும் மணமான பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில் உங்கள் வீட்டிற்கு நல்ல வாசனை கிடைக்க இதைவிட அதிகமாக தேவைப்படுகிறது. எனவே உங்கள் தங்குமிடத்தை அற்புதமானதாகவும் ஆச்சரியமாகவும் மாற்ற 6 எளிய வழிகள் இங்கே உள்ளது.

1. குப்பைத் தொட்டியை மாற்றவும்:

உங்கள் வீட்டை நன்றாக வாசனையாக்குவதற்கும், எந்த நாற்றங்களிலிருந்தும் விடுபடுவதற்கும் இது மிகவும் வெளிப்படையான வழியாகும். குப்பைத் தொட்டி பெரும்பாலும் பழ தோல்கள், மிச்சம் போன்ற பலவிதமான மணமான பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும். இது உங்கள் வீட்டை கெட்ட  வாசனையடையச் செய்யும். எனவே தினமும் அதனை காலியாக்கி, ஒவ்வொரு முறையும் அதை மாற்றவும்.

2. வாசனை மெழுகுவர்த்திகள்:

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது உங்கள் வீட்டை தெய்வீக வாசனையாக மாற்றுவதற்கான ஒரு உறுதியான வழியாகும். ஒவ்வொரு அறையிலும், வாழ்க்கை அறை முதல் படுக்கையறைகள் வரை ஒரு மெழுகுவர்த்தி வைத்து, நீங்கள் உங்கள் வீட்டை ஒளிரச் செய்யுங்கள்.

3. போட்புரி (Potpurri): 

இவை அழகாகவும், வாசனை மிகுந்ததாகவும்  இருக்கும். இவை ஒவ்வொரு வீட்டு அலங்காரக் கடையிலும் எளிதில் கிடைக்கின்றன. மேலும் ஒரு சில உலர்ந்த பூக்களை சில அத்தியாவசிய எண்ணெயுடன் கலந்து ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்கு காற்று புகாத டப்பாவில்  வைப்பதன் மூலம் நீங்களே சொந்தமாக அதை தயாரிக்கலாம்.

4. விரிப்புகளை சுத்தம் செய்யுங்கள்: 

உங்கள் வீட்டிற்கு ஒரு விசித்திரமான வாசனையை வெளியிடுவதற்கு பெரும்பாலும் விரிப்புகள் முக்கிய குற்றவாளிகளில் ஒன்றாகும். இதைத் தவிர்க்க, உங்கள் விரிப்புகளில் சில பேக்கிங் சோடாவைத் தூவி, பின்னர் அவற்றை 

நன்கு சுத்தம் செய்து  துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம்.

5. பழங்களை கொதிக்க விடவும்:

ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்! உங்கள் வீட்டில் ஒரு  ஆச்சரியமான வாசனையை பெற, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை  நிரப்பவும். அதில் வெட்டப்பட்ட எலுமிச்சை மற்றும் உங்களுக்கு பிடித்த மூலிகைகள் சேர்க்கவும். மூலிகைகள் மற்றும் பழங்களின் வாசனை வீடு முழுவதும்  ஊடுருவி பரவ குறைந்த வெப்பத்தில் இவற்றை கொதிக்க வைக்கவும்.

6. உட்புற தாவரங்கள் (Indoor plants):

பல தாவரங்கள் ஒரு இனிமையான வாசனை கொண்டவை மற்றும் காற்றை சுத்திகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டை நன்றாக வாசனை செய்ய லில்லி, மல்லிகை, கார்டியாஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம். 

Views: - 6

0

0